திரை விலகட்டும்!
2014-09-30@ 15:23:08

இரவுக்கே உரிய
அத்தனை ரகசியங்களும்
அவனையும் அவளையும்
ஒரு பொருளாகக் கருதிச்
சேர்த்துக் கொள்ளட்டும்.
ஷீபா சென்னையில் வளர்ந்தவள். எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்களுடன் பழகுபவள்... ஆனால், எல்லை தாண்டாதவள். புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொண்ட செக்ஸ் குறித்த அறிவும் தெளிவும் அவளுக்கு இருந்தன. புகைப்படத்தில் பார்த்தபோதே அர்ஜுனை அவளுக்குப் பிடித்துப் போய்விட்டது. நடிகர் விஷால் சாயல்... நல்ல உயரம்... களையான முகம். அர்ஜுனுக்கு விருதுநகர். கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனமாக வளர்ந்தவன். பெண்களிடம் பேசவே கூச்சப்படுபவன்.
விருதுநகரில் இளங்கலைப் பட்டம் பெற்று விட்டு சென்னையில் சி.ஏ. முடித்திருந்தான். ஒரு பெரிய நிறுவனத்தில் ஆடிட்டர்! ஆனாலும், சென்னை ஒட்டவில்லை. அதன் அதிவேகம் அவனை மிரள வைத்தது. ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது வியப்பாக இருந்தது. ஷீபாவின் முக லட்சணமும் வாளிப்பான உடலும் மஞ்சள் நிறமும் பெண் பார்க்க வந்த அன்றே அவனை டபுள் ஓ.கே. சொல்ல வைத்தன. இரு வீட்டார் சம்மதத்துடனும் நடந்தது திருமணம்.
முதல் இரவு... அறைக்குள் படபடப்போடு உட்கார்ந்திருந்தான் அர்ஜுன். ஷீபா பால் சொம்புடன் வந்தாள். அவனருகே அமர்ந்தாள். அவன் கூச்சத்தோடு தள்ளி உட்கார்ந்தான். ‘இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா!’ அவளுக்கு வியப்பு. அவன் தயக்கத்தைத் தகர்க்கத் தயாரானாள். அவனைத் தொட்டாள். தலையை வருடினாள். நெற்றியில் முத்தமிட்டாள். அப்புறம் என்ன... இருவரின் மூச்சுக் காற்றும் அனலாக மாறிக் கலந்தன. அந்த இரவு இனிதாக முடிந்தது. அவனுக்கோ நிம்மதி பறிபோயிருந்தது.
சந்தேகம் நெருஞ்சி முள்ளாக உறுத்தத் தொடங்கியது. ‘கன்னி கழியாத பெண்ணுக்கு முதல் இரவில் கன்னித்திரை கிழிந்து ரத்தம் வரவேண்டுமே! அதோடு, ஷீபாவுக்கு கூச்சமே இல்லையே! அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம்... இந்த விஷயத்தில் முன் அனுபவம் இருக்குமோ?’ தறிகெட்டுப் பறந்தன யோசனைகள். பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னான். பிரச்னை பெரிதானது.
‘பெண்ணை ஊர் மேயவிட்டா இப்படித்தான்... ரத்தமே வரலையாமே? எத்தனைபேர் கிட்ட போனாளோ?’ வார்த்தைகளில் விஷம் தோய்த்து வாரி இறைத்தாள் அர்ஜுனின் அம்மா. முதலிரவு அவர்கள் உறவை முறித்த இரவானது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? அர்ஜுன் நம்பிய கட்டுக்கதைகளே.
முதலிரவு அன்றுதான் கன்னித்திரை கிழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளும் செய்கிறார்கள். சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், ஹாக்கி விளையாடுதல், இரண்டு பக்கமும் காலை போட்டு வண்டி ஓட்டுதல்...
ஏன் பஸ்ஸில் ஏறும் போது கூட கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு. ரத்தம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கன்னித்திரையின் அடர்த்தி, அதில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவைப் பொறுத்து ரத்தம் வரும்.
சிலருக்கு சில சொட்டுகளே வரும். காம உணர்ச்சி தூண்டப்படும்போது பெண்குறியில் சுரக்கும் நீர் சரியான அளவில் இருந்தால் ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வந்துவிடும். கலவி எளிதாக முடியும். அர்ஜுன்-ஷீபா தம்பதிகளுக்கு நடந்தது அதுதான். அர்ஜுன் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, ஷீபாவின் அன்பை இழந்துவிட்டான். இப்படியான சந்தேகங்கள் உள்ளவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவரிடம் Premarital counselling பெற வேண்டும்.
திருமண பந்தத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். அதுதான் அஸ்திவாரம். கணவன், மனைவி இருவரும் சரிசமம். எதை, யார் முதலில் ஆரம்பித்தால் என்ன? நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்க வேண்டும். அவ்வளவுதான்! பஸ்ஸில் ஏறும்போது கூட கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு. ரத்தம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கன்னித்திரையின் அடர்த்தி, அதில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவைப் பொறுத்து ரத்தம் வரும்.
(தயக்கம் களைவோம்!)
Tags:
Sheba was brought up in Chennai. Palakupaval with men without any shy ... but tantataval border.மேலும் செய்திகள்
சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!
தம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்
வழக்கம் முக்கியம்!
சியர் லீடர் ஆவதே சிறப்பு!
3 ல் ஒரு பெண்ணுக்கு...
கூட்டு ஒப்பந்தக் கொள்கை
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி