அழிவின் விளிம்பில் பழங்கால விளையாட்டு...

Date: 2013-04-24@ 15:01:31

அத்திப்பூவும் 16 சிப்பாய்களும் மூலம் மீட்டெடுக்கிறார் தமிழ்ப்பிரியா. தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி, காயா பழமா, காக்காகம்பு,  தொட்டுவிளையாட்டு போன்ற பெயர்களை தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆம் இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின்  பழங்கால விளையாட்டுகள். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டமே அமர்ந்து  விளையாடிய விளையாட்டுக்கள் தான் இவை.

இந்த விளையாட்டுகள் எல்லாம் என்ன ஆனது. எங்கே போனது, எப்படி மறைந்தது என்று சற்று சிந்தித்து பார்த்தால் தொழில்நுட்ப வளர்ச்சியின்  தாக்கம் எந்த அளவுக்கு குழந்தைகளை முடக்கி வைத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.மின்னணு விளையாட்டு பொருட்களின் ஆதிக்கம்  அதிகரிப்பதன் விளைவு பழங்கால விளையாட்டுகள் அழிந்து கொண்டே வருகின்றது.

அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்கால விளையாட்டுகளை இனியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று குரல்கொடுக்கிறார் ஈரோட்டை சேர்ந்த  தமிழ்ப்பிரியா. பழங்கால விளையாட்டுகளை மீட்டெடுப்பதற்காக ஈரோடு பெரியார் நகரில் அத்திப்பூவும் 16 சிப்பாய்களும் என்ற பெயரில் பயிற்சி  மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இது குறித்து தமிழ்ப்பிரியா கூறியதாவது:

150க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் தமிழர்களின் பழங்கால விளையாட்டுகளாக இருந்தன. நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக  இந்த விளையாட்டுகள் ஒவ்வொன்றாக அழிந்து வருகிறது. தற்போது குறிப்பிடும் படியாக இருப்பது ஜல்லிகட்டு, ரேக்ளா, வழுக்குமரம், பட்டம் போன்ற  சில விளையாட்டுகள் மட்டுமே.

ஆனால் பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, சூ விளையாட்டு, உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65  விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு,  மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில்  தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும், ஆண்கள்  மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், மோடிவிளையாட்டு, பானை உடைத்தல்  போன்ற 30 விளையாட்டுகளும், குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள்  இருந்தன.

காலத்தின் மாற்றத்தால் தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகளை மறந்துவிட்டு ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகளையும், சீனா  பொம்மைகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் ஒவ்வொன்றும் ஒரு பயன்பாட்டை ஏதாவது ஒரு  வகையில் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி போன்ற ஏதாவது ஒரு  பயன்பாட்டை கட்டாயம் உள்ளடக்கியதாக இருக்கும்.

குறிப்பாக பல்லாங்குழி விளையாட்டை பொறுத்தவரை கணக்கிடும் ஆற்றலை அதிகரிக்க செய்யும். பருப்பு கஞ்சி என்ற விளையாட்டு மூலம்  சிறுகுழந்தைகளுக்கு நமது உணவு வகைகளும், உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற உணர்வையும் இந்த விளையாட்டு  மூலம் கற்றுக்கொள்ள முடியும். இதே போல தாயம் விளையாட 4 பேர் தேவை. இந்த விளையாட்டை தாய், தந்தை, 2 குழந்தைகள் அல்லது குடும்ப  உறவினர்கள் அமர்ந்து வீட்டில் விளையாடும் போது உறவினர்களின் அறிமுகம், குடும்ப உறவுகள் மேம்படும்.

மேலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் வழிவகுக்கும். பரமபதம் விளையாட்டின் மூலம் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற  கருத்தையும், வனவாசம் விளையாட்டின் மூலம் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களையும் அதன் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள  முடியும். இப்படி ஒவ்வொரு விளையாட்டும் ஏதாவது ஒரு பயன்பாட்டினை கொடுக்கும் வகையில் இருக்கும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் இன, மொழி, பண்பாடு, கலாசாரத்தை போற்றும் விளையாட்டுகள் இன்றும்  உயிரோட்டமாக உள்ளது. தமிழர்களின் விளையாட்டான 8 கட்டதாயம் கர்நாடகாவில் சக்குபாரா என்ற பெயரிலும் வடஇந்தியாவில் பஞ்சி என்ற  பெயரில் தற்போதும் உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் பல்லாங்குழி விளையாட்டு ஆப்பிரிக்காவில் மஞ்சுசாலா என்ற பெயரில் உள்ளது.  தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெவ்வெறு பெயர்களில் இருக்கின்ற சூழ்நிலையில் தமிழகத்தில்  மட்டும் அழிந்து வருவதை மீட்டெடுக்க முதல் முயற்சியாக பழங்கால விளையாட்டுகளை இளைய தலைமுறையினர் இலவசமாக  கற்றுக்கொடுப்பதற்காக அத்திப்பூவும் 16 சிப்பாய்களும் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு கற்றுக்கொடுத்து வருகிறோம்.

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் பழங்கால விளையாட்டுகளை ஆச்சரியமாகவும், எளிதிலும் கற்றுக்கொள்கின்றனர். இந்த பழங்கால  விளையாட்டுகளை தான் விளையாட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. மாறாக இது போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் தமிழகத்தில்  இருந்தது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு அடுத்த தலைமுறையினர்க்கும் இதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தான்  எங்கள் நோக்கம். இவ்வாறு தமிழ்ப்பிரியா கூறினார். காலத்தின் மாற்றத்தால் தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகளை மறந்துவிட்டு  ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகளையும், சீனா பொம்மைகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis

Like Us on Facebook Dinkaran Daily News