Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

3டி மியூரல் ஓவியங்களில் ரெடி லாபம்!

மாற்றம் செய்த நேரம்:3/14/2013 3:48:31 PMReady in 3-D drawings miyural profit!


என்னதான் ரஜினி படம் என்றாலும், 'சிவாஜி’யை சாதாரணமாகப் பார்ப்பதற்கும், 3டி எஃபெக்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே! அப்படித்தான்  ஓவியங்களும். ‘என்னது... ஓவியங்களில் 3டியா’ எனக் கேட்கத் தோன்றுகிறதா?

ஒரு மலை, அதிலிருந்து கொட்டுகிற அருவி என காட்சிகளை சாதாரண ஓவியத்தில் வெறும் வண்ணங்களில் மட்டும்தான் காட்ட முடியும். நிஜமான  மலையிலிருந்து, நிஜமான அருவியே கொட்டுகிற மாதிரி தத்ரூபமாகக் காட்ட முடியும் என்பதுதான் 3டி ஓவியத்தின் சிறப்பே. சென்னையைச் சேர்ந்த  பூமா, விதம்விதமான 3டி ஓவியங்கள் செய்வதில் நிபுணி. ‘‘ஓவியங்கள்ல இதுதான் லேட்டஸ்ட்.

வீடு முழுக்க மற்ற ஓவியங்களை மாட்டி வைக்கிறதுக்குப் பதில், ஒரே ஒரு 3டி ஓவியம் மாட்டிப் பாருங்க... அப்புறம் தெரியும் உங்க வீட்டோட அழகு  எப்படி மாறுதுன்னு’’ என்கிற பூமா செய்கிற 3டி ஓவியங்கள், சென்னையின் பல நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பங்களாக்களை  அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

‘‘மேலெழுந்த மாதிரியான தோற்றம்தான் இந்த ஓவியங்களோட சிறப்பே. இயற்கைக் காட்சியோ, வீடோ, சாமி உருவங்களோ... எதையும் தத்ரூபமா  காட்ட முடியும். பிளைவுட், ஸ்பெஷல் கிளே, அக்ரிலிக் கலர், வார்னிஷ்னு இதுக்குத் தேவையான பொருள்கள் எல்லாமே சுலபமா கிடைக்கக்  கூடியவை. மத்த களிமண் ஓவியங்கள் எல்லாம் எடை அதிகமா, கையாள சிரமமானதா இருக்கும். இதுல அந்தப் பிரச்னையும் இல்லை. எடை கம்மி.  எடுத்துட்டுப் போறதுக்கும் சுலபம். தப்பு பண்ணிட்டாலும், அந்த களிமண்ணை எடுத்துட்டு, மறுபடி ஒட்ட முடியும். பொருள் வேஸ்ட் ஆக  வாய்ப்பில்லை.

கத்துக்க நினைக்கிறவங்களுக்கு, 24க்கு 18 இன்ச் அளவுள்ள ஓவியம் பெஸ்ட். ஏன்னா அந்த அளவுலதான் நுணுக்கங்களைத் துல்லியமா கத்துக்க  முடியும். அது தெரிஞ்சாலே, எத்தனை சின்ன அளவையும் பண்ணிட முடியும். 10க்கு 15 அளவுள்ள ஒரு 3டி ஓவியத்தை முடிக்க 3 நாளாகும். 1,500  ரூபாய் செலவுல உருவாக்கும் ஓவியத்தை 3,500 ரூபாய்க்கு விற்கலாம். கிரகப்பிரவேசத்துக்கு அன்பளிப்பா கொடுக்க பொருத்தமானது. பெரிய  ஹோட்டல்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் இதை விரும்பறதால, விற்பனை வாய்ப்புக்குப் பிரச்னையே இல்லை’’ என்கிறார் பூமா.

What's film, 'Sivaji' to be normal looking and looking at the difference between 3-D effects are there? Just like a painting. 'What ... 3 paintings Barons' feel to hear that?
Advertisement
Advertisement

செய்திகள்

மகளிர்

நன்றி குங்குமம் தோழியூத் சாய்ஸ்: ஷைனி அஷ்வின்என்னதான் நாகரிகம் மாறினாலும் மேற்கத்திய மனோபாவத்துக்கு பெண்கள் மாறினாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவங்கக்கிட்டருந்து பறிக்கவே முடியாது. அதுதான் ...

நன்றி குங்குமம் தோழிஎன் சமையலறையில்! .ராதா ஸ்ரீராம் நிலக்கடலைப் ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

மருத்துவம்


சமையல்

எப்படிச் செய்வது?எல்லா மாவையும் சலித்துக் கொண்டு தேவையான தண்ணீர், வெண்ணெய் மற்றும் எள், சீரகம், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து, ...

எப்படிச் செய்வது?பச்சரிசியை நனைத்து இடித்து பொடிக்கண் சல்லடையில் 2 முதல் 3 தடவை கப்பி விழாமல் சலித்துக் கொள்ளவும். (கப்பி இருந்தால் சீடை வெடிக்கும்) உளுந்தை ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

5

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தன்னம்பிக்கை
கவலை
தொந்தரவு
சந்தோஷம்
நன்மை
கோபம்
மறதி
சந்திப்பு
உயர்வு
உதவி
துணிச்சல்
மகிழ்ச்சி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran