சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

Date: 2013-03-13@ 15:38:53

சோப் போட்டு குளித்தால் தோல், முகமெல்லாம் வறண்டு போகிறது. இயற்கையான முறையில் குளியல் பவுடர் செய்வது எப்படி?

பதில் சொல்கிறார் மூலிகை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி

பச்சைப்பயறு 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், வெட்டிவேர் 20 கிராம், வெள்ளரி விதை 50 கிராம் ஆகியவற்றை  மெஷினில் அரைத்து, சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

இதில் பால் கலந்து தேய்த்துக் குளிக்கவும். இந்த பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும நோய்கள் நெருங்காது. கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக்  கொண்டால் தேவையற்ற ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அரிப்பு, கொப்பளங்கள், முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கும் அருமருந்து!

Like Us on Facebook Dinkaran Daily News