Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கர்ப்பத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை

மாற்றம் செய்த நேரம்:7/30/2012 4:49:09 PM


கர்ப்பம் தரித்து 5 மாதம் ஆகிவிட்டால், குழந்தை வளைய வரும்போது, வயிற்றில் இழுத்துப் பிடித்துக் கொண்டு வலி வரும். அப்போது விளக்கெண்ணையைக் காய்ச்சி, வெந்தயத்தைப் போட்டு, பொரித்து எடுக்க வேண்டும். அந்த எண்ணெயைத் தொப்புளில் சிறிது ஊற்றி தொப்புளைச் சுற்றித் தடவி, ஊறியதும் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

இரவில் தடவிக் கொண்டு, காலையிலும் குளிக்கலாம். இரவு சாப்பாடு விரைவாக முடித்துக் கொள்ள வேண்டும். புளிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது, பலாப் பழம் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது, ஜீரணம் ஆகாது. பிரசவம் கஷ்டமாகும். வலிப்பு, ஜன்னி கூட வந்து விடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் கொஞ்ச நேரம் ஓய்வாக மல்லாந்து படுத்துக்கொண்டு மூச்சை மெல்ல உள்ளே இழுத்து மெல்ல வெளியே விடவேண்டும்.

இப்படியே தினமும் பலமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டால் பிரசவத்தின் போது வேதனை எதுவும் இல்லாமல் சுகமாகப் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தர்ப்பூசணிபழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். மூளைக்குப் பலமும் கல்லீரலுக்கு வலுவும் கூட ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு நல்ல போஷாக்குக் கிடைக்கும். அத்துடன் குழந்தையின் எலும்புகள் மற்றும் இருதயம் பலப்படும். கர்ப்பிணிகள் இரவு மிஞ்சும் அடியில் தங்கிய சாதத்தில் பால்விட்டுப் பிசைந்து. துளி தயிரை அதில் உறைஊற்றுவது போல ஊற்றிவைத்தால். மறுநாள் ருசி மட்டுமல்ல. டானிக்கே தேவையில்லை

தினமும் வென்னீரில் தேன் விட்டுக் குடித்தால் குழந்தைக்கு ரத்தம் விருத்தியாகும் கர்ப்பிணிகளின் வயிறும் கனக்காமல் இருக்கும். குனிந்து, நிமிர்ந்து வேலை செய்து வாக்கிங் போய் நேரத்துக்கு உணவு அருந்தி. இறை உணர்வுடனும் நல்ல சிந்தனையுடனும் இருந்தால் குழந்தைகள் புத்திசாலிகளாகவும் டிப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
 
கருத்தரித்த மகளிர் அதிமதுர வேரினை அவ்வவ்போது ஒரு துண்டு எடுத்து வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கர்ப்பிணிகள் வாரம் ஒரு நாள் சீமைப்பார்லியை ஒரு பிடி அளவு எடுத்து, இரவு வேகவைத்து காலையில் வடிகட்டி 2 ஸ்பூன் தேன் விட்டுப் பருகி வர ரத்த அழுத்தம் காரணமாக வரும் கால் வீக்கம், முகவீக்கம் தணியும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். உடலுக்கும் நல்ல சக்தியை அளிக்கும்.

100கிராம் சீமைப் பார்லியை லேசாக வறுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து கால் லிட்டராக சுருக்கி வடிகட்டி 2 ஏலக்காய் நசுக்கிப்போட்டு பனகற்கண்டு தேவையான அளவு சேர்த்து சாப்பிடலாம். இது கருவுற்ற பெண்களுக்கு சத்துணவாக அமையும். கர்ப்ப காலத்தில் தங்களின் உணவில் விட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், குழந்தைகளுக்குக் கண் பார்வை நன்றாக இருக்கும்.

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

புதிய நம்பிக்கைசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் நரம்பியல் துறை, குணமடைந்த  நோயாளிகளுக்கு  சுயதொழில் அமைக்கும் ...

நகம், திருகாணி, உடைந்த வளையல் துண்டுகள், ஹேர்பின், இரும்புச் சங்கிலி, சாவி, காசு, பேட்டரி, காந்தம், குண்டூசி, ஆணி... என்ன இதெல்லாம்?சென்னையைச் சேர்ந்த ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


சமையல்

எப்படிச் செய்வது?ரவையைத் தவிர, எல்லாவற்றையும் சேர்த்து 7 நிமிடங்களுக்கு ...

எப்படிச் செய்வது?அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, கொர கொரப்பாக அரைக்கவும். பொட்டுக் கடலைக்கு பதிலாக, துவரம் பருப்பு ,கடலைப் பருப்பு, கொள்ளு பயன்படுத்தலாம். மிளகாய்க்கு பதில் மிளகு, ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சாதுர்யம்
ஆர்வம்
மனநிறைவு
உழைப்பு
சலனம்
தனலாபம்
சுபம்
பாசம்
மகிழ்ச்சி
பணப்பற்றாக்குறை
ஆசை
வேலை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran