Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ்


 
 
 

ராகுலுடன் ப்ரியங்கா வருகை

Updated  3/17/2010 7:52:11 PM

திருச்சி வந்த ராகுலுடன் அவரது சகோதரி ப்ரியங்கா காந்தி வருகை தந்தது காங்கிரஸ் கட்சியினருக்கு வியப்பை ஏற்படுத்தியது.


திருச்சியில், இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பார்வையிட, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி இன்று திருச்சி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய பயணத் திட்டத்தை காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் ரகசியமாகவே வைத்திருந்தனர்.


ராகுல் காந்தி மட்டுமே வருவார் என்று காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தனி விமானம் மூலம் திருச்சி வந்த ராகுலுடன் அவரது சகோதரி ப்ரியங்கா காந்தி பச்சை நிற சேலையில் வந்திருந்தார். ராகுல் வருகையை மட்டுமே எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ப்ரியங்கா வருகை வியப்பை ஏற்படுத்தியது. 


இதையடுத்து இருவரும் திருச்சி கண்டோன்மெண்டு ஓய்.எம்.சி.ஏ. கட்டிடத்துக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றனர். அங்கு நடக்கும் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பார்வையிட்டனர்.

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி

Updated  3/17/2010 7:51:25 PM

பிரபல இந்தி நடிகரும் அரசியல்வாதியுமான தர்மேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீரென உடல்நலம் குன்றியதால் சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவின் உடல்நிலை தற்போது தேறியுள்ளதாக அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உடல்நலம் குன்றிய அவரை நடிகர்களும், அரசியல் கட்சியினரும் நலம் விசாரித்து வருகின்றனர்


மாயாவதி நடவடிக்கை: ஒய்.என்.சர்மா நீக்கம்

Updated  3/17/2010 5:54:30 PM

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஒய்.என்.சர்மா கட்சியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். மாயாவதி பணமாலை விவகாரத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் மாயாவதிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட போதும் ஏன் இந்த நீக்கம் புரியவில்லை என்றும் சர்மா புகார் அளித்துள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியில் ஜனநாயகம் இல்லையென்றும் நீக்கப்பட்ட சர்மா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாயாவதிக்கு அணிவித்தது பணமாலைதான், மலர்மாலை அல்ல என்றும் நீக்கப்பட்ட சர்மா தெரிவித்துள்ளார்.

திடீரென தங்கம் விலை உயர்வு!

Updated  3/17/2010 4:09:30 PM

சென்னை: கடந்த சில தினங்களில் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 ஆகவும் மற்றும் ஒரு கிலோ பார்வெள்ளியின்விலை ரூ.28,060 ஆகவும், மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1565 மற்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.12,520 ஆகவும் உயர்ந்துள்ளது.

தோனிக்கு காயம் : தோனிக்குப் பதில் சுரேஷ் ரெய்னா கேப்டன்

Updated  3/17/2010 2:44:52 PM

கொல்கத்தா : ‌சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவர் அவரை ஓய்வு எடுக்கும்படி ஆலோசித்துள்ளார். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி தோனி அடுத்த 10 நாட்களுக்கு ஓய்வெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் ஒரு சில ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் தோனிக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி துறையில் தமிழகத்தை முன்னேற்ற அரசு உறுதி !

Updated  3/17/2010 2:33:08 PM

சென்னை: வாகன உற்பத்தியில் சென்னையை 10 இடத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஒரகடம் நிஸான் கார் தொழிற்சாலையைத் திறந்து வைத்த பொழுது முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரகடம் வாகன பரிசோதனை மையத்திற்கு 304 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளதாகவும் முதல்வர் உரையின் போது குறிப்பிட்டுள்ளார். வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் வாகன உற்பத்தி துறையில் தமிழகத்தை முன்னேற்ற அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படையல் சாப்பிட்டதில் இருவர் பலி: சாமியார் மீது வழக்கு

Updated  3/17/2010 1:09:15 PM

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குறி சொல்லும் சாமியார் கொடுத்த படையலை சாப்பிட்ட 2 பேர் பலியாகி உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாமியாரிடம் அழைத்து சென்ற பொழுது இந்த விபரீதம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாமியார் படையலுடன் மதுவையும் கலந்து சாப்பிட கொடுத்துள்ளார். படையல் சாப்பிட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் போரட்டம்: ஆசிரியர்கள் ஆதரவு

Updated  3/17/2010 12:51:12 PM

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காமராஜர் பள்ளி மாணவர்கள் 500 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணம் வசூலித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவர்கள் உரிய நோட்டுப்புத்தகங்கள் வழங்காததால் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் அமர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு பள்ளி ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழின் நம்பர் 1 நாளிதழ் !

Updated  3/17/2010 12:36:12 PM

சென்னை: தமிழின் நம்பர் 1 நாளிதழாக தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2009 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆய்வுப் படி மொத்தம் 12 லட்சத்து 35 ஆயிரம் பிரதிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நாளேடுகளின் மொத்த விற்பனையின் ஆய்வுபடி ஏ.பி.சி (ஆடிட் பிரோ ஆப் சர்குலேசன்) சர்டிபிக்கேட் கிடைத்துள்ளது. தினகரன் தமிழ் வரலாற்று நாளேடுகளில் இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லை பெரியார் அணை வழக்கு

Updated  3/17/2010 12:15:22 PM

முல்லை பெரியார் அணையை ஆய்வு செய்ய அமைத்த குழுவை ரத்து செய்ய வேண்டும். 5நபர் குழுவை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு கோரிக்கையிட்டுள்ளது.4நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் 5நபர் குழுவை ரத்து செய்வதால் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்கள் தான் வந்து சேரும் என்று அரசு வழக்கறிங்கர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தேர்தலில் மோதல்

Updated  3/17/2010 12:01:58 PM

சென்னை: சென்னை அமைந்தகரையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையால் மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெறவிருந்தது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து ஒரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையின் போது கார்கள், ஆட்டோக்கள் நொறுக்கப்பட்டதால் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் போராட்டம்

Updated  3/17/2010 11:44:29 AM

சென்னை: ஊழியர்களின் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. பணி நிரந்தரம் 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 1500 கடைகளில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து கடைகளையும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் கடையை உடைத்து வியாபாரம் செய்த நிலையில் திறக்கப்பட்ட கடைக்குமுன் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பதற்றம் நிலவி வருகிறது. பயங்கர பாதுகாப்புடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்ய சபா: எம்.பி.களுக்கு பாராட்டு

Updated  3/17/2010 11:03:19 AM

புதுடெல்லி: ராஜ்ய சபாவில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஓய்வு பெரும் எம்.பி.க்கள் 13 பேருக்கும் பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் ஓய்வு பெரும் எம்.பி.க்கள் 13 பேரையும் பாராட்டி பிரதமர் மற்றும் அமீர் அன்சாரி பேசியுள்ளனர். இதனிடையே ராஜ்ய சபா பட்ஜெட் கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இஸ்ரோவில் நடந்த துப்பாக்கி சூடு: தனிப்படை அமைத்து தேடல்

Updated  3/17/2010 10:49:31 AM

பெங்களூர்: பெங்களூர் பியலாலூவில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்திற்கு எதிரே நேற்று திடீரென நடந்த துப்பாக்கி சூடு காரணமாக அங்கே பதற்றம் நிலவி வருகிறது. திடீரென பாதுகாப்பாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பாதுகாப்பாளர்களுக்கு எதிராக நடந்த திடீர் தாக்குதலால் இஸ்ரோவில் இன்னும் பதற்றம் நிலவி வருகிறது.

ரேஷனில் அதிகரித்து வரும் ஊழல்

Updated  3/17/2010 10:39:40 AM

பொது விநியோக திட்டத்தில் ஊழல் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் மாநில குழு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்களுக்கு முறையாக செல்லவேண்டிய பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு முறையாக சென்றடையாமல் வெளிசந்தைகளில் விற்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும் அரசு ஓர் ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மக்களுக்காக பொது விநியோகப் பொருட்களை வழங்கி வருகிறது . இந்த பொது விநியோக ஊழல் குற்றசாட்டு குறித்து வரும் ஏப்ரல் 7ல் விசாரணை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறை: போலீசாருடன் கைதிகள் ரகளை

Updated  3/17/2010 10:16:02 AM

திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென தாக்குதல் ஏற்பட்டது. கைதிகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதை போலீசார் கண்டித்துள்ளனர். இதனை எதிர்த்து கைதிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதனை கண்டித்த போலீசாருடன் கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஹெட்லி நாளை கோர்ட்டில் ஆஜர்

Updated  3/17/2010 9:58:19 AM

சிகாகோ: முன்னதாக மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியதன ஹெட்லி கடந்த அக்டோபரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளான். இதனையடுத்து அமெரிக்க அதிகாரிகள் ஹெட்லியை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வழக்கு சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருவதால் வரும் 18ம் தேதிக்குள் ஹெட்லியை கோர்ட்டில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெட்லி கைது செய்யப்பட்டதிலிருந்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை ஹெட்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போதுதான் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வானா இல்லை மறைத்துவிடுவானா என்பது தெரியவரும்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி!

Updated  3/16/2010 11:21:40 PM

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 .2 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

பொன்சேகா மீதான விசாரணை ஒத்திவைப்பு

Updated  3/16/2010 10:26:09 PM

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பொன்சேகாவுக்கு எதிரான ராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று முதல் முறையாக கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றன. அப்போது பொன்சேகா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானதாகவும் தெரிகிறது.

எனினும் அங்கு இடம்பெற்ற வாத விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ராணுவ சட்ட விதிகளின் படி ராணுவ சேவையில் உள்ளபோது, அரசியலில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு விசாரணை மட்டும் இன்று நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

பொன்சேகா மீதான ஆயுத கொள்முதல் மோசடி மற்றும் ஒரு குற்றச்சாட்டு ராணுவ நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் கங்குலி அணியை வெல்வது கடினம் : டோனி

Updated  3/16/2010 7:39:18 PM


பிசிசிஐக்கு ரூ.750 கோடிவருமானம்

Updated  3/16/2010 7:33:46 PM


நித்யானந்தா கூறுவது பொய்: பாபா ராம்தேவ்

Updated  3/16/2010 7:29:21 PM

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது பாலியல் ஆய்வுக்காகத்தான் என்று நித்யானந்தா கூறுவது பொய் என்றும், நித்யானந்தாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் பதஞ்சலி யோகா பீடத்தின் நிறுவனரும், யோகா கலை பயிற்சி அளிப்பவருமான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரிசை டோனி தொடர்ந்து முதலிடம்

Updated  3/16/2010 7:27:25 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதன்படி பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் டோனி 819 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
 
ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்சி 811 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தையும், டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 785 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தையும் பிடித்தனர். தெண்டுல்கர் 5 வது இடத்திலும், ஷேவாக் 11 வது இடத்திலும், யுவராஜ்சிங் 13 வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 15 வது இடத்திலும் உள்ளனர்.
 
கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 4 வது இடத்திலும், பாண்டிங் (ஆஸ்திரேலியா) 6 வது இடத்திலும், சுமித் (தென்ஆப்பிரிக்கா) 7 வது இடத்திலும், காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 8 வது இடத் திலும், சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) 9 வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 10 வது இடத்திலும் உள்ளனர். 
 
பந்துவீச்சு தர வரிசையில் இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மட்டுமே “டாப் 10“ ல் இடம் பிடித்தார். அவர் 645 புள்ளிகள் பெற்று 7 வது இடத்தை பிடித்தார். 
 
வெட்டோரி (நியூசிலாந்து) 761 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சாகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 2 வது இடத்தையும், பிரைஸ் (ஜிம்பாப்வே) 3 வது இடத்தையும் பிடித்தனர். 
 
குலசேகரா (இலங்கை), ஷானேபாண்ட், மில்ஸ் (நியூசிலாந்து) 4 முதல் 6 வது இடங்களிலும், ஙிஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா), அப்ரிடி (பாகிஸ்தான்), ஜான்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் 8 முதல் 10 வது இடங்களிலும் உள்ளனர். 
 
இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 133 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ம.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

Updated  3/16/2010 4:43:46 PM

சென்னை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. ஏப்ரல் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் கேரளா அரசை கண்டித்தும் மே 28ல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மோசடி வழக்கில் கைதான இயக்குனர்

Updated  3/16/2010 4:06:41 PM

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஒருவர் ராணுவ அதிகாரியின் மகளை நடிகையாக்குவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் அரவிந்த் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது ராணுவ அதிகாரி புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது எழுந்துள்ள பல புகார்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதி மற்றும் ஆஸ்திரேலியா தூதர் சந்திப்பு

Updated  3/16/2010 3:28:53 PM

சென்னை: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிகமாக தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் பற்றின விளக்கத்தை ஆஸ்திரேலியா தூதர் பீட்டர் வர்கிஷ் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதைப்பற்றி ஆஸ்திரேலியா தூதர் பீட்டர் வர்கிஷ் கூறியதாவது, ஆஸ்திரேலியாவில் இனி இந்தியர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்றும், மேலும் கல்வி பதிவு முறை பற்றி பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மு.க.அழகிரி மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் என்றும் பீட்டர் வர்கிஷ் தெரிவித்துள்ளார்.

மாயாவதி பேரணி விவகாரம்: மீண்டும் அவை ஒத்திவைப்பு

Updated  3/16/2010 3:00:39 PM

புதுடெல்லி: மாயாவதி பேரணி நடத்திய விவகாரம் காரணமாக இன்று 1 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டிருந்தது. லக்னோவில் மாயாவதி நடத்திய பேரணி , ரேபரேலியில் தொடரும் ஊரடங்கு உத்தரவு ‌தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மீண்டும் கூடிய அவையில் எதிர்கட்சிகள் ஏற்படுத்திய கூச்சல் குழப்பத்தினால் அவை வரும் ஏப்ரல் 12 ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லக்னோ மாநாடு: மாயாவதிக்கு அணிவித்தது மலர் மாலை அல்ல எதிர்கட்சிகள் புகார்

Updated  3/16/2010 2:51:14 PM

புதுடெல்லி: பி.எஸ்.பி மாநாடு லக்னோவில் மிகப் பிரம்மாண்மாய் கொண்டாடப்பட்டது. மாநாட்டின் போது மாயாவதிக்கு அணிவித்தது 1000 ரூபாய் நோட்டு மாலை என்று எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயாவதிக்கு அணிவித்தது அலங்காரம் மிகுந்த மலர் மாலை தான் என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் மாயாவதிக்கு அணிவித்த 1000 ரூபாய் நோட்டு மாலையின் மதிப்பு 2 கோடி இருக்கும் என்று எதிர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். மாநாட்டில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்திற்கான செலவினங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ க்கு மாநில காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இறந்தவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகரிப்பு!

Updated  3/16/2010 2:07:47 PM

சென்னை: கடந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டில் இறந்தவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விபத்தில் இறந்துபோன வெங்கடேசன், பார்த்திபன் இருவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் 13 மணி நேரத்திற்குள் இறந்தவர்களின் நான்கு சிறுநீரகம், இரண்டு கல்லீரல், நான்கு கண்கள் மற்றும் சில இதய வால்வுகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் குடும்பத்தார்கள் சம்மதத்துடன் தானம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும். அரசு நடத்திய மாநில அளவிலான இறந்தவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குபின் இது நடந்துள்ளது .மேலும் இறந்து போனவர்களில், கடந்த 2008ல் 6 தானர்களிடமிருந்து 30 உறுப்புகளும், 2009ல் நடந்த கணக்கெடுப்பில் 59 தானர்களிடமிருந்து 317 உறுப்புகளும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டுள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு : ரூ.4.8 கோடியில் மின் விளக்கு

Updated  3/16/2010 1:48:29 PM

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டில் ரூ.4.8 கோடியில் மின் விளக்கு அமைக்கும் பணி துவங்கியது. அவிநாசி ரோட்டில் இப்பணிகளை மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக் ஆகியோர் துவங்கினார். மின் விளக்கு பணிகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒப்புதல் பெற்ற 3 நாளில் பணி துவக்கப்படுவது குறிப்பிடதக்கது. பணிமுடிந்த பின்னர், கோபுர மின் ஒளியில் பிரதான ரோடுகள் ஜொலிக்கும் என எதிர்க்கப்படுகிறது.
 
 
click here
Untitled Document
Copyright 2009 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191 Extn:2264
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?