SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

826
23/09/2017

மும்பை: அசுத்தமான கடற்கரை என பெயர் பெற்ற கடற்கரையை பொது மக்கள் இணைந்து சுத்தப்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா கடற்கரை அசுத்தமான கடற்கரை என பெயர் பெற்றது. இதனால், அதிருப்தியடைந்த அப்ரோஷ் ஷா என்ற வழக்கறிஞர் கடற்கரையை சுத்தப்படுத்த வேண்டும் என ஆர்வம் கொண்டார். தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அப்பகுதி மக்களிடம் விளக்கினார். இதனையடுத்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் இணைந்து கடந்த 100 வாரங்களாக சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் 7.4 மில்லியன் கிலோ குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன. இந்த பணிக்கு மும்பை மாநகராட்சி, நடிகர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தனர். தற்போது இந்த கடற்கறை சுத்தமான கடற்கரையைாக காட்சியளிக்கிறது. தனது முயற்சி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ள அப்ரோஷ் ஷா, மற்ற கடற்கரையையும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்