SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மகா புஷ்கரகம் விழா: மயிலாடுதுறையில் கோலாகலமாகத் துவங்கியது

1165
12/09/2017

மயிலாடுதுறை: 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காவிரி மகா புஷ்கரகம் விழா மயிலாடுதுறையில் இன்று கோலாகலமாகத் துவங்கியது. ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும். இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். அதன்படி, துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி(இன்று) முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் விழாக் குழு அமைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவிரி துலாக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். காவிரித்தாய் சிலைக்கு மஞ்சள் அபிஷேகம் நடந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்