SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு..: கனமழையும் பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

1413
14/01/2020

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு உள்ளதால் வீடுகளின் மேற்கூரைகளில் அதிகளவில் பனி படர்ந்து, பாரம் தாங்காமல் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில், ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் பனிப்பொழிவால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 21 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், பனிப்பொழிவு மற்றும் கனமழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்