SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்க்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

1451
13/01/2020

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி வரும் நிலையில் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துபாயில் பெய்த திடீர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் கடந்த 2 நாள்களாக பரவலாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 150 மில்லி மீட்டர் அளவுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்