SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

462
10/12/2019

கல்விக் கட்டணம், விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். கல்விக் கட்டணம், விடுதி கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி எழுச்சிப் பேரணியை தொடர்ந்தனர். இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகே, மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேற முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், மாணவ, மாணவியர் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்