SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிசாம்பல், கரும்புகையை சுமார் 1000 மீட்டர் உயரத்துக்கு வெளியேற்றிய மெக்ஸிக்கோவின் போபோகேட்பெட்டல் எரிமலை!

1086
14/08/2019

மெக்ஸிக்கோவில் உள்ள போபோகேட்பெட்டல் எரிமலை வெடித்து சாம்பலை வெளியேற்றி வருகிறது. அந்நாட்டின் 2வது மிகப்பெரிய எரிமலையான போபோகேட்பெட்டல், நேற்று திடீரென வெடித்து, பாறை துகள்கள், கரும்புகையை சுமார் 1000 மீட்டர் உயரத்துக்கு வெளியேற்றியது. வானை முட்டும் அளவுக்கு எரிமலையிலிருந்து கரும்புகை வெளியேறி காற்றில் கலந்து வரும் நிலையில், சூரிய உதயத்தின் போது இது செந்நிறத்தில் காட்சியளித்தது. மேலும், எரிமலையின் மேற்பரப்பும் பனிபடர்ந்தது போல் வெண்ணிறத்தில் இருந்தன. எரிமலை நேற்று முதல் அவ்வப்போது எரிகுழும்புகளை வெளியேற்றி வருவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்