SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் : பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த மதுரை மாநகர்!

1001
19/04/2019

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. 9ம் தேதி தங்க சப்பர வாகனம், பூத, அன்ன வாகனம், என் தொடா்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் இறைவன் எழுந்திருளினர். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 17ம் தேதி காலை நடைபெற்றது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு கல்யாணக் கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து நேற்று காலை 5.45 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகா் காலை 7.25 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகரை காண அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தா்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்