SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

1129
19/04/2019

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில், இந்தாண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையுடன் கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) குருத்து ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்ற பாடுகளை நினைவுகூறும் வகையில், தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறுகிறது. ஈஸ்டர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்