SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

1300
26/04/2018

ஜகர்தா: இந்தோனேஷியாவில் பழைய எண்ணெய் கிணறை தோண்டும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தோனேஷியாவில் கிழக்கு அசே மாகாணத்தில் பசி புதித் கிராமம் உள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள பழைய எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு வந்தது. சுமார் 250 மீட்டர் (820) அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கிணற்றை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கிணற்றின் அருகே ஏராளமானோர் எண்ணெய் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எண்ணெய் கிணறு தீப்பற்றி எரிந்தது. இதனால், அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். எண்ணெய் கிணற்றில் பற்றிய தீ பனை மரங்களை விட அதிக உயரத்துக்கு எழும்பியது. மேலும் அருகில் இருந்த வீடுகளிலும் தீ பரவியது. இதில் பலர் தீயில் சிக்கினார்கள். தீ விபத்தில் 21பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்