SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

1343
24/04/2018

கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டொரண்டோ நகரில் உள்ளுர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஃபின்ஞ் அவன்யூ பகுதியில் மக்கள் வழக்கம்போல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்து அங்கிருந்தவர்களை நசுக்கியது. இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தப்பி ஓடி அடுத்த தெருவில் பதுங்கியிருந்த வேன் ஓட்டுநரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு ஏதேனும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்