SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

835
23/04/2018

டெல்லி: மத்திய அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பி வைத்த சிறுமி பலாத்கார குற்றவாளிக்கு தூக்குதண்டனை அவசர சட்டத்திருத்தத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை, டெல்லி பெண்கள் ஆணையத் (டிசிடபிள்யு) தலைவர் சுவாதி மாலிவால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று பழசரம் அருந்தி முடித்துக் கொண்டார். கதுவா, உன்னாவ் சம்பவங்களையடுத்து, பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி மாநில ெபண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதுபோன்று சிறுமி பலாத்கார குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம், பெண்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், டெல்லி போலீசின் எண்ணிக்கையை 14,000மாக அதிகரிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்