SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் கடல் சீற்றம் : கடலோர கிராம மக்கள் தவிப்பு

758
23/04/2018

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 2 வது நாளாக நேற்றும் கடல் சீற்றம் காணப்பட்டது. மீன்பிடி படகுககள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. நேற்று காலை முதல் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அழிக்கால் கடலோர கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இப்போதும் சுமார் 30 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அழிக்கால் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று மண்டைக்காடு புதூர் பகுதியில் 5க்கும் மேற்பட்ட விடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் தேங்காய்ப்பட்டினம், இரயுமன் துறையில் கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகளை கடல் அலை இழுத்துச் சென்றதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்