SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

3094
21/04/2018

மாலத்தீவில், உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி, வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. அங்குள்ள ரங்காலி என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி 4 அடி ஆழத்தில் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்த 2 மாடி சொகுசு விடுதியை வடிவமைத்துள்ளது. மேல்தளம் மட்டும் கடல்நீருக்கு மேலே தெரியும் வகையில் நிர்மானிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள பகுதியில் படுக்கை அறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய அறைகளும் அமைந்திருக்கும். கண்ணாடித் தொட்டி போலவே உள்ள இந்த அறைகளுக்குள்ளே இருந்து கொண்டு, கடல்நீரில் உலவும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம். ஒரு இரவில் மட்டும் இந்த விடுதியில் தங்கியிருக்க இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்