SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதவியேற்பு

379
16/04/2018

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பதவியேற்றார். உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை தொகுதிக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜ சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பட 9 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 8 பேர் எம்பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். உடல்நலக் குறைவு காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து சமீபத்தில் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்