SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரழிவின் பிடியில் காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 2 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

596
23/03/2018

ஆப்பிரிக்காவின் காங்கோவில் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க நாட்டில் உள்ள கொந்தளிப்புக்கான முக்கிய காரணங்கள், இனவாத வன்முறை மற்றும் ஜனாதிபதி ஜோசப் கபிலாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகும். ஹெமா ஹேடர்ஸ் மற்றும் வடக்கு இட்யூரி மாகாணத்தில் லென்டு விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்தது 70க்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கோவில் அதிபர் ஜோசப் கபிலாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதாலும், வடக்கு இதூரி பகுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள தடையாலும் அங்குள்ள மக்கள் பசியால் தவிப்பதாக ஐநா சபையின் மனிதநேயப் பிரிவு தலைவர் மார்க் லோகிக் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்