SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட சிவப்பு புள்ளிகளை படம் பிடித்துள்ள ஜூனோ விண்கலம்: நாசா வெளியீடு

1110
20/03/2018

வியாழன் கிரகத்தில் உள்ள செந்நிறப் புள்ளிகளை நாசா அனுப்பிய ஆய்வுக்கலம் படம் பிடித்துள்ளது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு ஜூனோ என்ற ஆய்வுக்கலத்தை கடந்த 2011ம் ஆண்டு நாசா அனுப்பி வைத்தது. தற்போது வியாழன் கிரகத்தை நெருங்கியுள்ள ஜூனோ அங்கு காணப்படும் சிவப்பு பெரும் பள்ளங்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது. 7 ஆயிரத்து 500 மைல்களுக்கு அப்பால் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. செந்நிறப்புள்ளிகள் வியாழன் கிரகத்தில் ஏற்படும் புயல்களில் ஒன்று எனக் கூறியுள்ள நாசா, மணிக்கு 680 கிலோ மீட்டர் வேகத்தில், ஆழ்ந்த ஆரஞ்சு நிறத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் புயலின் நிறத்திற்கான காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்