SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய சரக்கு விமானத்தில் இருந்து தங்க மழை: ஓடுதளத்தில் சிதறிய தங்கம் மற்றும் வைரம்

2405
17/03/2018

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்து தங்கம் மற்றும் வைரம் விமான ஓடுதளத்தில் மழையாக பொழிந்த சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில வினாடிகளில் விமானத்தில் இருந்து தங்ககட்டிகள் மற்றும் வைரங்கள் உள்ளிட்டவை மழைபோன்று பொழிந்துள்ளது. ஓடுதளத்தில் தங்கம் மற்றும் வைரம் சிதறிய தகவல் அறிந்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்து அவை எப்படி விழுந்தன என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்