SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ் அதிபர் மோடியுடன் இணைந்து சூரியமின்னுற்பத்தி பூங்கா திறப்பு: கங்கை ஆற்றில் படகுப் பயணம்

627
13/03/2018

மிர்சாப்பூர்: 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து 100 மெகாவாட் திறன்கொண்ட சூரியமின்னுற்பத்தி பூங்காவை திறந்து வைத்தார். இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கங்கை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வாரணாசி திரும்பிய தலைவர்கள் இருவரும் அங்குள்ள தீன்தயாள் உபாத்யாய் கைவினைப் பூங்காவை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கங்கைக்கரையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படகில் பயணம் மேற்கொண்டனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் படகுப் பயணத்தில் உடனிருந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்