SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

501
16/12/2017

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி முறைப்படி பதவியேற்று கொண்டார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக, 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியானது. இதில் போட்டியிட, ராகுல் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், காங்கிரஸ் தலைவராக, ராகுல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று நடக்கும் விழாவில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை, ராகுல் முறைப்படி ஏற்றுக் கொண்டார். அவரிடம் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளட்ட மூத்த தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராகுல் தலைவரானதை காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்