SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரியில் ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

329
07/12/2017

கன்னியாகுமரி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நேற்று இரவு கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். கன்னியாகுமரி வந்த அவர் முதலில் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காரில் புறப்பட்டு சென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே புறவழிச்சாலையில் உள்ள பாதிக்கப்பட்ட வயல்களை ஆளுநர் பார்வையிட்டார். அவரிடம் புயல் சேதங்கள் குறித்து கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் விளக்கமளித்தார். இதனையடுத்து உயிரிழந்த மீனவர் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கு திரண்ட மீனவர்கள் அவரை முற்றுகையிட முயன்றனர். குளிச்சல் சென்ற ஆளுநர் அங்குள்ள லோபாஸ் மண்டபத்தில் பங்குதந்தை எட்வின் மற்றும் மீனவர்களிடம் பேசினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்