SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

834
20/11/2017

சான்யா: உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்று சாதித்துள்ளார். 17 ஆண்டுக்குப் பிறகு இப்பட்டம் வெல்லும் இந்திய அழகி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சீனாவின் சான்யா நகரில் 67வது உலக அழகிப் போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், 118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர். இந்தியாவின் சார்பில் ‘மிஸ் இந்தியா’வான அரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) பங்கேற்றார். பல்வேறு கட்ட போட்டிகளின் அடிப்படையில் டாப்-40 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி நாளான நேற்று 40 அழகிகள் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு மனுஷி சில்லருடன், மெக்சிகோ, இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா அழகிகள் தேர்வாகினர். இறுதியில், உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டீபனி ஹில்லும், 3ம் இடத்தை மெக்சிகோவின் ஆன்ட்ரியா மெஸாவும் பெற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்