SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கலிபோர்னியா காட்டுத்தீயால் சேதமடைந்த பொருட்கள், வாகனங்களை சுத்தம் பணி தொடக்க

1418
14/11/2017

சான்டாரோசா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வாரமாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளன. கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுப்பகுதியில் திடீரென தீ பரவத்தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ மளமளவென நகர பகுதிகளிலும் பரவியது. இதனையடுத்து தற்போது காட்டுப்பகுதியை சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நகரங்களில் எரிந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்