SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று குழந்தைகள் தினம்: ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை பயணம் ஒரு பார்வை

324
14/11/2017

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் அழைக்கப்படுபவர் ஜவஹர்லால் நேரு. இவர் நவம்பர் 14, 1889ம் ஆண்டு உத்திரப் பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார். 1916ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது. காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். 1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்