SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கென்யா அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஒடிங்கா ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

345
12/10/2017

கென்யா: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒடிங்கா ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஒடிங்கா ஆதரவாளர்கள் நைரோபி மற்றும் கிசுமு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை களைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். கென்யா அதிபர் தேர்தலில் இருந்து எதிர்க்கட்சி தலைவரான ரெயிலா ஒடிங்கா விலகி கொண்டார். தேர்தலில் கென்யாட்டா முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதால், செல்லாது என அறிவித்து, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கென்யாட்டாவும், ஒடிங்காவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ஒடிங்கா திடீரென வாபஸ் பெற்றார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள முக்கிய பூங்காவில் கூடி போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்