SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் ராஷ்டிரபதி பவன்: ஈபிள் டவர் போலலே 16 மில்லியன் வண்ண கலவைகளில் ஒளிரும்

1055
12/10/2017

புதுடெல்லி: பாரீஸ் ஈபிள் டவர் போலே இனி தினமும் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனும் வண்ண மின்னொளியில் ஜொலிக்கும். மாறும் ஒளி அமைப்பு (டைனமிக் லைட்னிங் சிஸ்டம்) மூலம் அமைக்கப்பட்ட இந்த வண்ண மின்னொளி ராஷ்டிரபதி பவன் இரண்டு கட்டடங்களிலும் ஜொலிக்கும். 21,450 சதுர மீட்டர் பரப்பளவு வரை ஒளிரும் இந்த விளக்கானது, தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படும். சில விநாடிகளுக்கு ஒவ்வொறுமுறை வண்ணங்கள் மாறிக்கொண்டிருக்கும். மேலும் மின் விளக்குகளின் முழு திறனானது இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும். இது பரந்தளவிலான தீம்களையும் மற்றும் 16 மில்லியன் வண்ண கலவைகளையும் உள்ளடக்கியுள்ளது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்