SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம்: சென்னையில் அறிமுகம்

747
12/10/2017

சென்னை: தமிழக அஞ்சல்துறை சார்பாக முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அஞ்சல் வாரம் அக்டோபர் 9-14 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அஞ்சல்துறை சார்பில், நடமாடும் அஞ்சல் அலுவலகத்தை தமிழக அஞ்சல்துறை தலைவர் சம்பத் தொடங்கி வைத்தார். இந்த அலுவலகம் தினமும் மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தென்சென்னை, பரங்கிமலையை மையமாக கொண்டு இயங்கும் என்று சம்பத் தெரிவித்துள்ளார். அஞ்சல்துறையின் சேவைகளான தபால் தலை விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணி ஆர்டர் உள்ளிட்ட, பிற சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், என் அஞ்சல் தலை என்ற திட்டமும், இந்த நடமாடும் அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த சேவை மக்கள் பயன்பாட்டிற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்