SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றிய கலிபோர்னியா காட்டுத்தீ: 17 பேர் பலி, 183 பேர் மாயம்

285
11/10/2017

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பரவி, அங்குள்ள 8 நகரங்களில் தீப்பற்றி எரிகிறது. ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ள இப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியாததால், 2000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 183 பேர் மாயமாகியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்