SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

4120
15/06/2020

மத்திய பிரதேச தலைநகரான போபால் புறநகர்ப்பகுதியில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுத்துள்ளன. இதன் ஆபத்தை அறியாமல் பலர் ஆர்வத்துடன் செல்போனில் படம்பிடித்து சென்றனர். அங்குள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி விடும் என்று விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். பகலில் பிறந்த படியே இருக்கும் வெட்டுக்கிளிகளை கொல்வது இயலாது என்பதால் இரவில் அவை மரங்களில் ஓய்வெடுக்கும் போது பூச்சி கொல்லி மருந்தை தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பூச்சி மருந்தை மரங்களில் தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெட்டுக்கிளிகளால் இதுவரை 35 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்