SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

989
27/02/2020

சீனாவில் உயிர்பலி வாங்கி வருகிறது கொரோனா வைரஸ். நேற்று வரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,715 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்து 64 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் நட்பு நாடாக திகழும் இந்தியா, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவ முன்வந்துள்ளது. இதற்கிடையே கடந்த 8-ந்தேதி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய விமானம் செல்ல சீனா அனுமதி அளித்தது. இதனையடுத்து 18 டன் மருந்து பொருட்களுடன் சி-17 ரக இந்திய ராணுவ விமானம் நேற்று சீனா புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்