SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

697
25/02/2020

இந்திய பயணத்தின் 2ம் நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க தேசிய கீதம் மற்றும் இந்திய தேசிய கீதம் முழங்க டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார். டிரம்பை கைக்குலுக்கி வரவேற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். பின்னர் அதிபர் டிரம்ப்புக்கு அமைச்சரவை சகாக்கள் மற்றும் முப்படைத் தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் டெல்லி ராஜ்காட்டுக்கு சென்ற அதிபர் டிரம்ப், அங்குள்ள காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இருவரும் இணைந்து காந்தி நினைவிட வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்