SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

668
25/02/2020

டெல்லியில் மோஜ்பூர், பிராஹ்ம்ப்யூரில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீண்டும் கல்வீச்சு நடைபெற்றுள்ளது. டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் 160 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக சாலையை மறித்துள்ளதால், மாற்று இடத்திற்கு சென்று போராட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்காக போராட்டக்காரர்களுடன் பேச சமரசக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டனர். ஆனால், இந்தகுழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் அங்கு தொடர்ந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்