SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

744
24/02/2020

சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் டிரம்பிற்கு காந்திய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் மோடி மற்றும் அதிபர் டிரம்புக்கு கதர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்புக்கு மோடி சுத்திக் காட்டினார். காந்தி பயன்படுத்திய பொருள்கள் குறித்தும் அதிபர் டிரம்புக்கு மோடி விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் அதிபர் ட்ரம்ப் தரையில் அமர்ந்து நூல் நூற்று மகிழ்ந்தார். அதன் பின்னர், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் படத்திற்கு அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காந்தி படத்துக்கு கதர் நூலால் ஆன மாலையை அறிவித்து மோடி, டிரம்ப் மரியாதை செலுத்தினர். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் தனது கருத்தைப் பதிவிட்டார். எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி, அற்புதமான பயணம் என்று சபர்மதி ஆசிரம‌ வருகை பதிவேட்டில் அதிபர் டிரம்ப் பதிவு செய்தார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்