SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

1639
21/02/2020

பெங்களூரில் AIMIM இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி பேசும் போது, அமுல்யா என்ற பெண் மேடையேறி வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார். அவரை தடுக்க ஓவைசி முயன்ற போதும் அப்பெண் கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்திற்கு ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் கருத்தை மறுத்த அவர், இந்தியா ஜிந்தாபாத் என்பதே தமது கொள்கை என்று கூறினார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்