SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

1897
20/02/2020

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கோவை – சேலம் பைபாஸ் சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே கோவையில் இருந்து சேலத்திற்கு டைல்ஸ் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும், பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், இரு வாகனங்களும் நொறுங்கிப் போயின. இதில் 14 ஆண்கள் மற்றும் 5 பெண்கள், பேருந்து ஓட்டுனர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் ஆட்சியர், மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். மேலும், இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்