SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

747
19/02/2020

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகையை முன்னிட்டு, தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகரில், கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. டிரம்ப், தன் மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதையொட்டி அந்நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாலை தடுப்புகள், சிலைகள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்படுகிறது. தாஜ்மகால் அருகே, கலாக்ருதி அரங்கில், 'முகபத் - தாஜ்' என்ற கலாசார நிகழ்ச்சியை, டிரம்ப் பார்த்து ரசிக்க உள்ளார். அவர் வருகையையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 பேர் ஆக்ரா வந்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்