SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

877
14/02/2020

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த ஆண்டு நடந்த கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது அஞ்சலி. அவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த போற்றத்தக்க நபர்கள். அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது" என தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்