SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

1884
28/01/2020

கொரோனோ வைரஸால் சீனாவே ஆடிப் போய் இருக்கும் நிலையில், அங்கு குறிப்பிட்ட மாகணங்கள் எப்படி இருக்கின்றன? ஒரு பேய் நகரம் போன்று அமைதியாக காட்சியளிப்பதாக கூறி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்னும் எத்தனை பேரின் உயிரை கொரோனோ வைரஸ் வாங்கப்போகிறதோ என்ற பீதியில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.சுமார் 11 மில்லியன் மக்கள் வாழும் வுஹான் மாகாணத்தை விட்டு இப்போது யாரும் வெளியேறக் கூடாது என்ற கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.தனியார் வாகனங்கள், இரயில்கள், விமானங்கள் போன்ற சேவையும் கடந்த 22 முதல் குறித்த மாகாணத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வுஹான் மாகாணம் மட்டுமின்றி சுற்றியுள்ள 16 நகரங்களுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 50 மில்லியன் மக்கள் வெளியேறாமல் வீட்டுக் குள்ளே அடங்கி கிடக்கின்றனர்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்