SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

519
28/01/2020

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் விண்வெளி வீரர்கள். இதுதான் விண்வெளியில் சமைக்கப்பட்ட முதல் குக்கீஸ் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பார்மிடானோ என்பவர்தான் இந்த குக்கீஸை தயாரித்துள்ளார். அவருக்கு உதவியாக நாசாவின் அதாவது அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோ இருந்துள்ளார். சாக்லேட் கலந்த சிப் குக்கியை இவர்கள் சோதனை முறையில் தயாரித்து அசத்தியுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது நல்ல டேஸ்ட்டா வந்திருக்காம் இந்த இரண்டு பேரும் தயார் செய்த குக்கீஸ்.என்ன ஒரு கஷ்டம்னா.. பூமியில் தயாரிக்கும் நேரம் போல குறுகிய நேரத்தில் இதை தயாரிக்க முடியவில்லையாம். ஒரு குக்கியை தயாரிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகி விட்டதாம். அது ஒன்றுதான் பெரும் சிரமமாக இருந்ததாம். இதுவே பூமியாக இருந்தால் கால் மணி நேரத்தில் சுட்டுத் தள்ளி விடலாம் என்பது நினைவிருக்கலாம். இருந்தாலும் 3 மணி நேரம் கஷ்டப்பட்டாலும் கூட சூடான சுவையான குக்கீஸை தயாரிக்க முடிந்ததுதான் இப்போது சாதனை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்