SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

439
27/01/2020

சென்னையில் இன்று கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதையடுத்து குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஆளுநரும், முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டனர். இதில் முப்படையினர், காவலர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன.குடியரசு தின விழாவை ஒட்டி வீரதீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவற்றை மேடையில் இருந்தவரே ஆளுநரும், முதலமைச்சரும் அனைவரும் கண்டு ரசித்தனர். பல்வேறு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கிராமிய நடனங்கள் நடைபெற்றன. பரத நாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், கோலாட்டம் மற்றும் பல்வேறு மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்