SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

1342
24/01/2020

கொரோனா வைரஸ் தற்போது சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 26 பேர் பலியாகியுள்ளனர். 850 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூஹான் பகுதியில்தான் இந்த கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வருகிறது. அருகில் உள்ள சில நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக வூஹான் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு பரவும். அதனால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகும். இதனால் அந்த நகரத்தை தற்போது மூடி உள்ளனர். அங்கிருந்து மக்கள் வெளியேறவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பரிதவித்துப்போய் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்