SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை அறிமுகம் செய்தது இஸ்ரோ

1089
23/01/2020

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தது இஸ்ரோ...விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் அங்கு உள்ள தட்பவெட்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்வதற்காக, மனித உடல் அமைப்பை அப்படியே கொண்ட பெண் ரோபோவை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.தற்போதைய ஆராய்ச்சிக்கு ஏற்ப, கால்கள் மட்டும் இல்லாமல் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் தான் பார்ப்பதையும், உணர்வதையும் பெங்களூருவில் உள்ள தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.இந்த தகவல்கள் மூலம், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான அம்சங்கள் என்னென்ன என்பதனை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மனிதர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பவும், அங்கு பாதுகாப்பான முறையில் வாழ்ந்திடவும் இந்த ரோபோ அனுப்பும் தகவல்கள் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரோபோ வியோ மித்ரா இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்பபடும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்