SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

541
21/01/2020

திருமலை: தெலங்கானாவில் ஐதராபாத் அருகே சாத்நகர் படேல் சாலை அருகே காம்மதனம் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் சாத்நகரில் ஒரு வீட்டின் மாடியில் நேற்று அதிகாலை சிறுத்தை பதுங்கியிருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக சாத்நகர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சாத்நகர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தை பிடிபடவில்லை. மேலும் சிறுத்தையை பிடிக்க முயன்றபோது வனஅதிகாரி ஒருவரை தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடித்து ஐதராபாத் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்