SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பான் படப் பாணியில் ஆப்பிரிக்காவில் ‘லோகஸ்ட’ வெட்டுக்கிளி தாக்குதல்…! : உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

1022
20/01/2020

‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளி தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் சிக்கல்தான். காப்பான் படப் பாணியில் ஆப்ரிக்க கிராமங்களில் லோகஸ்ட் வெட்டுக்கிளி தாக்குதல் நடந்துள்ளது. சோமாலியாவில் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவை பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்களை தின்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளன.இதனால் தங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க உணவு எதுவுமின்றி பட்டினியால் தவிப்பதாக அந்நாட்டு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சோமாலியாவை மட்டுமின்றி எத்தியோப்பியா, கென்யா உள்பட ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்