SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

691
13/12/2019

நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த காவல்துறையினரும், நாடாளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 6 காவலர்களும், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர், வீரர்களின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்